/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நடிகை குஷ்பூவின் உருவப்படத்தை எரித்து புதுச்சேரி தி.மு.க மகளிர் அணி போராட்டம்

ADDED : மார் 14, 2024 05:34 AM

புதுச்சேரி, : புதுச்சேரியில், தி.மு.க மகளிர் அணி சார்பில், நடிகை குஷ்பூவின் உருவப்படத்தை எரித்து போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் பெண்களுக்கு வழங்கப்படும், மகளிர் உரிமைத்தொகை குறித்து, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பூ, பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.
இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், குஷ்பூவை கண்டித்து தி.மு.க.,வினர்,போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையொட்டி,புதுச்சேரி மாநில தி.மு.க மகளிர் அணியினர், பெரியார் சிலை அருகில், நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டு குஷ்பூவின் உருவப்படத்திற்கு தீவைத்து எரித்தனர்.
புதுச்சேரி மகளிர் அணி அமைப்பாளர் காயத்ரி கூறும்போது, 'புதுச்சேரியிலும் மகளிர் உரிமைத்தொகை, சிலருக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில், இதை பிச்சை என பேசியிருக்கும் குஷ்பூ, புதுச்சேரியிலும் பிச்சை போடுவதாக தான் சொல்கிறாரா. கோடியில் புரள்பவருக்கு, ரூ.1000, பிச்சையாக தான் தெரியும்.
பெண்கள் வாழ்வை முன்னேற்றும் விதமாக, உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதை 'பிச்சை' என கொச்சைப்படுத்திய குஷ்பூ, பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
புதுச்சேரிக்குள், பா.ஜ.,விற்கு ஓட்டு கேட்டு, குஷ்பூ பிரசாரத்திற்கு வந்தால், நிச்சயம் விரட்டி அடிப்போம்' என்றார்.