/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொது இடத்தில் ரகளை: மூன்று பேர் மீது வழக்கு
/
பொது இடத்தில் ரகளை: மூன்று பேர் மீது வழக்கு
ADDED : டிச 16, 2025 04:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: பாகூர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, சோரியாங்குப்பம் வி.ஐ.பி., நகர் மற்றும் மகரிஷி நகர் பகுதியில், இரண்டு பேர் குடி போதையில், பொதுமக்களிடம் திட்டி ரகளையில் ஈடுபட்டனர். போலீஸ் விசாரணையில், அவர்கள் கடலுார் குண்டு உப்பளவாடியை சேர்ந்த அய்யப்பராமன் 37; வண்டிக்குப்பத்தை சேர்ந்த சிவமூர்த்தி 37; என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
இதேபோல், கிருமாம்பாக்கம் அடுத்த கன்னியக்கோவில் சந்திப்பு அருகே ரகளையில் ஈடுபட்ட சலங்கைக்கார கிராமத்தை சேர்ந்த அருள்குமார் 37; என்பவரை போலீசார் கைது செய்தனர்.

