/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் பி.ஆர்.டி.சி., நிர்வாகம் எச்சரிக்கை
/
ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் பி.ஆர்.டி.சி., நிர்வாகம் எச்சரிக்கை
ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் பி.ஆர்.டி.சி., நிர்வாகம் எச்சரிக்கை
ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் பி.ஆர்.டி.சி., நிர்வாகம் எச்சரிக்கை
ADDED : ஆக 08, 2025 02:18 AM

புதுச்சேரி: தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையெனில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுச்சேரியில் பி.ஆர்.டி.சி., 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரியும் ஒப்பந்த ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரியும், நிரந்தர ஊழியர்கள் 7வது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்த வலியுறுத்தி கடந்த 28ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, ஊழியர்கள் கூட்டுப் போராட்டக் குழு மூலம் 4 கட்டங்களாக பேச்சு வார்த்தை நடத்தி சுமுக முடிவு ஏற்படவில்லை. எழுத்துப் பூர்வமாக உறுதிமொழி அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என, தெரிவித்தனர்.
இந்நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள், போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையெனி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, பி.ஆர்.டி.சி., நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இது குறித்து மேலாண் இயக்குநர் சிவக்குமார் அனுப்பியுள்ள நோட்டீஸ்;
முதல்வருடன் கூட்டுப் போராட்டக் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு 7 வது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சம வேலைக்கு, சம ஊதியம் என்ற அடிப்படையில் ரூ.8 ஆயிரம் ஊதியத்தை உயர்த்தி ரூ.24 ஆயிரம் கொடுக்க முடிவு எடுக்கப்பட்டது.
இருப்பினும், சட்டவிரோதமாகப் பணிக்கு வராமல் போராட்டம் நடத்துவது பணியிடை நீக்கம் செய்ய வழிவகுக்கும். போராட்டம் தொடர்ந்தால் ஒப்பந்த ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்படவும் வாய்ப்புள்ளது. அதனால் போராட்டத்தைக் கைவிட்டு உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

