ADDED : அக் 12, 2024 02:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரியில் ஆட்டோ டிரைவர்களுக்கு அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
புதுச்சேரியில் அண்ணா தொழிற்சங்க பேரவை ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் சார்பில், ரயில் நிலையம் அருகில், ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது.
சிறப்பு விருந்தினராக அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் பங்கேற்று, ஆட்டோ டிரைவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில அவைத்தலைவர் அன்பானந்தம், மாநில பொருளாளர் ரவிபாண்டுரங்கன், ரயில் நிலைய அண்ணா தொழிற்சங்க பேரவை ஆட்டோ ஒட்டுனர்கள் சங்க தலைவர் கண்ணன், செயலாளர் மதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

