தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் 12 இடங்களில் மறியல்: மா.கம்யூ., முடிவு

 புதுச்சேரியில் 12 இடங்களில் மறியல்: மா.கம்யூ., முடிவு

 புதுச்சேரியில் 12 இடங்களில் மறியல்: மா.கம்யூ., முடிவு


ADDED : பிப் 09, 2026 05:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2026 05:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பா.ஜ., கூட்டணியின் பொய்த்துபோன ஆட்சியே புதுச்சேரியில் நடக்கிறது என, மா.கம்யூ., அரசியல் தலைமை குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டினர்.

அவர், புதுச்சேரியில்,கூறியதாவது:

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து என்பது அறிவிப்பாகவே இருக்கிறது. இந்த 5 ஆண்டு காலத்தில் நல்லாட்சி நடைபெறவில்லை. பொய்த்துபோன ஆட்சித்தான் நடந்துள்ளது. இந்த ஆட்சியின் சாதனையே போலி மருந்து ஊழலைத் தான் சொல்ல வேண்டும்.

இந்த அரசு எல்லாவிதத்திலும் தோல்வி அடைந்திருக்கிறது. எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. புதுச்சேரி மக்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.

எனவே, புதுச்சேரியில் பொய்த்துபோன என்.ஆர்.காங் - பா.ஜ., கூட்டணி ஆட்சியை கண்டித்து வரும் 20ம் தேதி வில்லியனுார், அரியாங்குப்பம் பகுதிகளில் விவசாயிகள்,பொது மக்களை திரட்டி நடைபயணமாகசென்று, சட்டசபை முன் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்துள்ளோம்.

மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள் வரும் 12ம் தேதி வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். விவசாயிகளும் இந்த போராட்டத்தில் இணைவதாக கூறியுள்ளனர். அந்த அடிப்படையில் முழுமையாக ஆதரவு தருவதாக தீர்மானித்துள்ளோம். புதுச்சேரியில் 12 இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளது' என்றார்.

சந்திப்பின் போது புதுச்சேரி மாநில குழு ஒருங்கிணைப்பாளர் பெருமாள், மாநில செயலாளர் ராமச்சந்திரன், செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம்,கொளஞ்சியப்பன் உடன் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us