ADDED : நவ 30, 2025 05:48 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி யில் இலவச மனைப் பட்டா வழங்க கோரி, பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தட்டாஞ்சாவடி தொகுதியில் வசிக்கும் வீடு இல்லாத மக்களுக்கு புதுப்பேட்டை, முருகேசன் நகர் ஆகிய பகுதியில் அரசு நில ஆர்ஜிதம் செய்துள்ளது.
இந்த இடத்தில், இலவச மனைப்பட்டா அல்லது அடுக்குமாடி குடியிருப்பு வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாக்கமுடையான்பட்டு கொக்கு பார்க் அருகில் நேற்று காலை 10:00 மணியளவில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சேதுசெல்வம் தலைமை தாங்கினார். அப்பகுதி பொது மக்கள் பலர் பங்கேற்றனர்.
