/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 04, 2025 04:55 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் வாகனங்களை கயிறு கட்டி இழுக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி, காமராஜர் சாலையில் பெட்ரோல், டீசல் விலை மற்றும் பேருந்து கட்டண உயர்வு, தலைக்கவசம் அணியாவிட்டால் அபராதம் என்பன உள்ளிட்ட அரசின் பல்வேறு நடவடிக்கைகளை கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், வாகனங்களை கயிறு கட்டி இழுக்கும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாநில தலைவர் கவுசிகன் தலைமை தாங்கினார்.
மாநில செயலாளர் சஞ்சய் சேகரன், பொருளாளர் ரஞ்சித்குமார், மத்திய குழு உறுப்பினர் ஆனந்த் மற்றும் இந்திய மாணவர் சங்கம் மாநில செயலாளர் பிரவீன் குமார் ஆகியோர் உரையாற்றினர்.
சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.