/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோமாரி நோய் தடுப்பு குறித்து செயல் விளக்கம்
/
கோமாரி நோய் தடுப்பு குறித்து செயல் விளக்கம்
ADDED : பிப் 26, 2024 05:01 AM

திருக்கனுார்: தென்னவராயன்பட்டில் வேளாண் கல்லுாரி மாணவர்கள் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பு குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.
காரைக்கால் ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவர்கள் மூன்று மாத ஊரக வேளாண் பணி அனுபவப் பயிற்சியை குச்சிப்பாளையத்தில் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக, தென்னவராயன்பட்டு கிராமத்தில் கால்நடைகளுக்கு பரவும் கோமாரி நோய் தடுப்பு குறித்து வேளாண் கல்லுாரி மாணவர்கள் விளக்கம் அளித்தனர்.
மேலும், ட்ரே நாற்றங்கால் தயாரிப்பு, ஓட்டும் பொறிகள் தயாரிப்பு, முட்டை அமினோ அமிலம் தயாரிப்பு, சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் மற்றும் அசாடிராக்டின் உள்ளிட்டவைகளை பயன்படுத்தும் முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு செயல் முறை விளக்கம் அளித்தனர்.
இதில், ஊர் தலைவர் சக்திகுமரன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

