/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரியாங்குப்பம் தொகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்கல்
/
அரியாங்குப்பம் தொகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்கல்
அரியாங்குப்பம் தொகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்கல்
அரியாங்குப்பம் தொகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்கல்
ADDED : டிச 27, 2025 05:36 AM

புதுச்சேரி: அரியாங்குப்பம் தொகுதி மக்களுக்கு இலவச பொங்கல் தொகுப்பை, அ.தி.மு.க., பொருளாளர் ரவி பாண்டுரங்கன் வழங்கினார்.
புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரியாங்குப்பம் தொகுதியில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும், அ.தி.மு.க., பொருளாளர் ரவி பாண்டுரங்கன் நேரடியாக சென்று பொங்கல், புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து, சில்வர் ட்ரம், காலண்டர், மற்றும் பொங்கல் தொகுப்பை வழங்க உள்ளார்.
இதற்கான துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் அ.தி.மு.க., நிர்வாகிகள் ஜீவா, ஜெயக்குமார், ரவி, அப்பு , அன்பு, பன்னீர், தக் ஷணாமூர்த்தி, கோபி, ரமேஷ், செல்வம், நாகப்பன், ஏழுமலை, ரங்கநாதன், பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, தொகுதியின் அனைத்து பகுதிகளுக்கும் தினமும் சென்று பரிசு தொகுப்பை நேரடியாக வழங்குகிறார்.

