தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அனுமதியின்றி பேனர்; போலீசார் வழக்குப் பதிவு

அனுமதியின்றி பேனர்; போலீசார் வழக்குப் பதிவு

அனுமதியின்றி பேனர்; போலீசார் வழக்குப் பதிவு


ADDED : ஏப் 07, 2025 06:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2025 06:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி; முத்தியால்பேட்டையில் அனுமதியின்றி பேனர் வைத்த நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரியில் அனுமதியின்றி டிஜிட்டல் பேனர், கட் அவுட் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டு, சாலைகளில் அனுமதி இல்லாமல் பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் முத்தியால்பேட்டை, மகாத்மா காந்தி வீதி- பிள்ளையார் கோவில் வீதி சந்திப்பில் போக்குவரத்திற்கு இடையூராகவும், நடைப்பாதையை ஆக்கிரமித்தும் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. இதுகுறித்து, புதுச்சேரி நகராட்சி உதவி பொறியாளர் முத்தியால்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் வைத்த மர்மநபர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us