/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
2 பேரிடம் ரூ.3 லட்சம் மோசடி போலீசார் விசாரணை
/
2 பேரிடம் ரூ.3 லட்சம் மோசடி போலீசார் விசாரணை
ADDED : மார் 19, 2024 05:21 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் இரண்டு பேரிடம் ரூ. 3.05லட்சம் பணம் மோசடி செய்த சைபர் கிரைம் குற்றவாளியை போலீசார் தேடிவருகின்றனர்.
புதுச்சேரியை சேர்ந்த பிரியா என்பவரிடம் மர்ம நபர் ஒருவர் பேசினார். வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலம் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறினார். அதை நம்பி அவர் பல்வேறு தவணை முறையில் ரூ. 2.88 லட்சம் பணத்தை தனது வங்கி கணக்கில் இருந்து அனுப்பினார். பின்னர் அந்த நபரை தொடர்பு கொண்டு போது எந்தவித பதிலும் அவரிடமிருந்து வரவில்லை.
இவரை தொடர்ந்து, புதுச்சேரியை சேர்ந்த மதன்கிருஷ்ணன் என்பவரிடம், ப்பிரி பையர் கேம் விளையாட்டு தொடர்பாக, ரூ. 17 ஆயிரத்தை பணத்தை அனுப்பி ஏமார்ந்தார்.
இவர்கள் இருவரும் கொடுத்த புகாரின்பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

