/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புகார் கொடுத்தும் கோட்டை விடும் போலீஸ்; தொடர் கொலைகளால் காவல் துறைக்கு களங்கம்
/
புகார் கொடுத்தும் கோட்டை விடும் போலீஸ்; தொடர் கொலைகளால் காவல் துறைக்கு களங்கம்
புகார் கொடுத்தும் கோட்டை விடும் போலீஸ்; தொடர் கொலைகளால் காவல் துறைக்கு களங்கம்
புகார் கொடுத்தும் கோட்டை விடும் போலீஸ்; தொடர் கொலைகளால் காவல் துறைக்கு களங்கம்
ADDED : ஜூலை 27, 2025 12:15 AM
சின்னஞ்சிறு மாநிலமான புதுச்சேரியில் கொலை என்பது சர்வ சாதாரணமான நிகழ்வாகிவிட்டது. அதுவும், கூலிப்படையினாரால திட்டமிட்டு அரங்கேற்றும் கொடூர கொலைகள் அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
குறிப்பாக அரசியல் பிரமுகர்களே கூலிப்படையினரால், கொடூரமாக வெட்டி கொல்லும் நிகழ்வுகள், அரசுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.
ஒருகாலத்தில், போலீசில் உள்ள நுண்ணறிவு பிரிவினர் ரகசியமாக விசாரித்து நடைபெறப் போகும் குற்றச் சம்பவங்களை கண்டுபிடித்து தடுத்த நிலை மாறி, தற்போது கொலைக்கு ஆளாகும் நபர்களே போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகாரே கொடுத்தாலும், போலீசார் அலட்சியப்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது.
இவ்வாறு, பா.ஜ., பிரமுகர்களான வில்லியனுார் செந்தில்குமார், லாஸ்பேட்டை உமாசங்கர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டனர். கடந்த வாரம் எல்லைபிள்ளைச்சாவடியை சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் துரை வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த மூவரும், கொலை செய்யப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் தங்களை கொலை செய்ய கும்பல் நோட்டமிட்டு வருவதாக புகார் தெரிவித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இத்தனைக்கும் இவர்கள் மூவரும், போலீஸ் துறையை கையில் வைத்திருக்கும் அமைச்சர் நமச்சிவாயம் சார்ந்துள்ள அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே, புகார் கொடுத்ததும் போலீசார் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், காவல் துறை மீது பொது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.

