நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரியில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், நேற்று முன்தினம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் தகவல்கள் பரவியது. ஆனால், சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்ட புகைப்படத்தில் உள்ள 6 பேரும் இந்த கொலை வழக்கில் தொடர்பு இல்லாதவர்கள்.
இது குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள எச்சரிக்கை பதிவில்; சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில், சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரப்பி பொதுமக்களை பீதிக்கு உள்ளாக்குவோர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்க உள்ளனர். பொய் தகவல் பரப்புவோர் இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்த்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் முடிவு செய்துள்ளனர்' என கூறப்பட்டுள்ளது.

