ADDED : ஏப் 18, 2025 04:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முத்தியால்பேட்டை அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியில் போக்சோ விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
ஆசிரியர் இந்துமதி வரவேற்றார். தலைமை ஆசிரியர் மரிய மார்டின் தலைமை தாங்கினார். புதுச்சேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சத்யா கலந்து கொண்டு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், அவற்றில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் மற்றும் போக்சோ சட்டப்பிரிவு குறித்து மாணவிகளுக்கு விளக்கம் அளித்தார். ஆசிரியை ரீட்டா மேரி நன்றி கூறினார். ஆசிரியர்கள் இந்திரா, இர்வின்மலோ மற்றும் அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

