/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பட்டா வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு
/
பட்டா வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு
ADDED : பிப் 26, 2024 04:53 AM

புதுச்சேரி: உப்பளம் தொகுதி மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., கலெக்டரிடம் மனு அளித்தார்.
உப்பளம் தொகுதி திப்புராயப்பேட்டை, லாசர் கோவில் வீதி, நிக்கோல் துரியோ குடியிருப்பு இடத்தில் 48 ஆண்டுகளாக, 16 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பட்டா கிடையாது.
இது குறித்து அப்பகுதிவாசிகள், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.,விடம் முறையிட்டனர். இதையடுத்து, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., அப்பகுதி மக்களுடன் கலெக்டர் குலோத்துங்கனை சந்தித்து மனு அளித்து, பட்டா வழங்கிட கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து, அந்தகுடியிருப்பு பகுதியை நேரில் ஆய்வு செய்வதாக கலெக் டர் உறுதி அளித்தார். தி.மு.க., நிர்வாகிகள், நோயல், ராஜி, இருதயராஜ், ராகேஷ், அருள் உடன் இருந்தனர்.

