/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி லோக்சபா தேர்தலுக்கு மனு தாக்கல் நாளை துவக்கம்: 5 நாட்களே உள்ளதால் கட்சிகளுக்கு நெருக்கடி
/
புதுச்சேரி லோக்சபா தேர்தலுக்கு மனு தாக்கல் நாளை துவக்கம்: 5 நாட்களே உள்ளதால் கட்சிகளுக்கு நெருக்கடி
புதுச்சேரி லோக்சபா தேர்தலுக்கு மனு தாக்கல் நாளை துவக்கம்: 5 நாட்களே உள்ளதால் கட்சிகளுக்கு நெருக்கடி
புதுச்சேரி லோக்சபா தேர்தலுக்கு மனு தாக்கல் நாளை துவக்கம்: 5 நாட்களே உள்ளதால் கட்சிகளுக்கு நெருக்கடி
ADDED : மார் 19, 2024 05:23 AM

புதுச்சேரி: புதுச்சேரி லோக்சபா தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை20ம் தேதி துவங்குகிறது. விடுமுறை கழித்து வேட்பு மனு தாக்கல் செய்ய ஐந்து நாட்கள் மட்டுமே உள்ளதால் அரசியல் கட்சி, சுயேட்சை வேட்பாளர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும் லோக்சபா தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடக்கும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து கடந்த 16ம் தேதி முதல் புதுச்சேரி மாநிலத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. மாநிலம் முழுவதும் தீவிர வாகன தணிக்கை நடந்து வருகின்றது.
வேட்பு மனு படிவம்விநியோகம்
புதுச்சேரி லோக்சபா தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை 20ம் தேதி புதிய கலெக்டர் அலுவலகத்தில் துவங்குகிறது. காலை 11 மணி முதல் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உணவு இடைவெளியின்றி வேட்பு மனுக்கள் பெறப்பட உள்ளது. ஒரு வினாடி கூட காலை 11 மணி முன்பாகவோ அல்லது 3 மணிக்கு பின்னரோ வேட்பு மனுக்கள் பெறப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் 27ம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட உள்ளது.
இந்த வேட்பு மனுக்கள் மீது 28ம் தேதி பரிசீலனை நடக்கின்றது. வேட்பு மனுக்களை திரும்ப பெற 30ம் தேதி இறுதி காலக்கெடு கொடுக்கப்பட்டுள் ளது. வேட்பு மனுவிற்கான 2-ஏ படிவம் நேற்று முதல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகின்றது.
அரசியல் கட்சிகளுக்கு நெருக்கடி
லோக்சபா தேர்தலில் போட்டியிட நாளை 20 ம்தேதி முதல் 27 ம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டாலும் ஏழு நாட்களும் பெறப்படாது.இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறையின்படி விடுமுறை நாளில் வேட்பு மனு பெறக் கூடாது.
அதேபோன்று நான்காவது சனிக்கிழமையும் வேட்பு மனு பெற கூடாது. எனவே நான்காவது சனிக்கிழமையான 23ம் தேதியும், ஞாயிற்றுகிழமையான 24ம் தேதியும் வேட்பு மனுக்கள் பெறப்படாது.
எனவே மொத்தமே ஐந்து நாட்கள் மட்டுமே வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கால அவகாசம் உள்ளதால், அரசியல் கட்சிகள் அதற்குள்ளாகவே வேட்பாளர்களை அறிவித்து, வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன.
முன் மொழிவு
லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு முன் மொழிவு செய்யப்பட வேண்டும். அங்கீ கரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளுக்கு வேட்பாளருடன் ஒருவர் முன்மொழிவு செய்யலாம்.
மற்ற வேட்பாளர்களுக்கு 10 பேர் முன்மொழிவு செய்ய வேண்டும். முன்மொழிவு செய்யபவர்கள் புதுச்சேரி லோக்சபா தொகுதியில் கட்டாயமாக வாக்காளர்களாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டிபாசிட்
பார்லிமெண்ட் தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் 25 ஆயிரம் ரூபாய் வேட்பாளர் தனியாகவோ அல்லது அல்லது முகவருடன் இணைந்து வங்கி கணக்கு ஆரம்பித்து இருக்க வேண்டும்.
அத்துடன் 25 ஆயிரம் ரூபாய் டிபாசிட் தொகை செலுத்த வேண்டும். எஸ்.சி..எஸ்.டி., பிரிவு வேட்பாளர்கள் 12,500 ரூபாய் செலுத்தினால் போதுமானது என தெரிவித்துள்ள மாநில தேர்தல் துறை வேட்பு மனு பெறுவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் துறையுடன் இணைந்து முடுக்கி விட்டுள்ளது.

