/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நிதியுதவி கோரி உள்துறை செயலரிடம் மனு முதல்வருக்கு மக்கள் முன்னேற்ற கழகம் பாராட்டு

ADDED : செப் 27, 2024 05:05 AM
புதுச்சேரி: மத்திய உள்துறை செயலரிடம் ரூ.5,828 கோடி நிதியுதவி கோரி முதல்வர் மனு கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது என புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
விமான நிலையம், சட்டசபை வளாகம், சுகாதார உள்கட்டமைப்பு, மருத்துவம் மற்றும் சட்டப் பல்கலைக்கழகம் போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக ரூ.5,828 கோடி நிதியுதவி கோரி மத்திய உள்துறை செயலரிடம் முதல்வர் மனு அளித்திருப்பது பாராட்டுக்குரியது. அதனுடன், மாநிலத்தை மத்திய நிதிக்குழுவில் சேர்க்க வலியுறத்தி இருக்க வேண்டும். அவ்வாறு இடமளித்தால், அரசின் நிதி நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும்.
புதுச்சேரிக்கு வரிப்பகிர்வு, அரசியலமைப்பின் 275வது பிரிவின் கீழ் மானியங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் மானியங்கள், மேம்படுத்தல் மானியங்கள், கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான மானியங்களில் நிதி பங்கை பெற உதவும்.
மேலும், புதுச்சேரியில் மூலதன முதலீட்டை பெருக்கி பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை ஊக்குவிக்கும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.