/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆர்.எஸ்.எஸ்., சார்பில் 6ம் தேதி பதசஞ்சலன் நிகழ்ச்சி
/
ஆர்.எஸ்.எஸ்., சார்பில் 6ம் தேதி பதசஞ்சலன் நிகழ்ச்சி
ஆர்.எஸ்.எஸ்., சார்பில் 6ம் தேதி பதசஞ்சலன் நிகழ்ச்சி
ஆர்.எஸ்.எஸ்., சார்பில் 6ம் தேதி பதசஞ்சலன் நிகழ்ச்சி
ADDED : அக் 04, 2024 03:24 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில், விஜயதசமியை முன்னிட்டு பதசஞ்சலன் மற்றும் பொது நிகழ்ச்சி வரும் 6ம் தேதி நடக்கிறது.
அதனையொட்டி, அன்று மாலை 4:15 மணிக்கு முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே பதசஞ்சலன் நிகழ்ச்சியும், மாலை 5:20 மணிக்கு புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் பொது நிகழ்ச்சியும் நடக்கிறது. இதில், ஸ்வயம் சேவகர்கள் சங்க சீருடை அணிந்து கலந்து கொள்ள வேண்டும்.
சீருடை முன்பதிவு செய்ய மற்றும் விலைக்கு பெற்றுக் கொள்ள புதுச்சேரி- 94432 70570, பாகூர்- 98653 26937, வில்லியனுார்- 99943 70045, திருக்கனுார்- 96774 91470 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும். இத்தகவலை புதுச்சேரி மாவட்ட கார்யவாஹ் செந்தில் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.