/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாஸ்போர்ட் விசாரணை பிரிவு போலீசார் அதிரடி மாற்றம்
/
பாஸ்போர்ட் விசாரணை பிரிவு போலீசார் அதிரடி மாற்றம்
ADDED : செப் 17, 2025 03:47 AM
புதுச்சேரி : பாஸ்போர்ட் விசாரணை பிரிவு போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள னர்.
புதுச்சேரி பாஸ்போர்ட் விசாரணை பிரிவில் பணி செய்யும் போலீசார் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களிடம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து போலீஸ் டி.ஜி.பி., ஷாலினி சிங் நடவடிக்கையின் பேரில், அவர்கள் கூண்டோடு காரைக்காலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, அங்கு வேலை செய்த போலீஸ்காரர் முருகன், காரைக்கால் வன்கொடுமை தடுப்பு பிரிவுக்கும், ஆரோக்கிய தாஸ், முரளிதரன், பிரபாகரன் ஆகிய 3 பேரும் காரைக்கால் கடலோர காவல்நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை காவல்துறை தலைமை அலுவலக போலீஸ் எஸ்.பி., மோகன் குமார் பிறப்பித்துள்ளார்