/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாய்க்கால் ஆக்கிரமிப்பால் நீரில் மூழ்கிய நெற்பயிர்
/
வாய்க்கால் ஆக்கிரமிப்பால் நீரில் மூழ்கிய நெற்பயிர்
வாய்க்கால் ஆக்கிரமிப்பால் நீரில் மூழ்கிய நெற்பயிர்
வாய்க்கால் ஆக்கிரமிப்பால் நீரில் மூழ்கிய நெற்பயிர்
ADDED : டிச 17, 2024 05:21 AM

திருக்கனுார்: விநாயகம்பட்டில் வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு காரணமாக மழைநீர் வடியாததால், 100 ஏக்கர் பரப்பிலான நெல் மற்றும் காய்கறி பயிர்கள் அழுகி வருகின்றன.
திருக்கனுார் அடுத்த விநாயகம்பட்டு கிராம விவசாயிகள் சோரப்பட்டு செல்லும் சாலையோரம் நெல், உளுந்து, காய்கறி, பூ வகைகளை அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.
மழைக் காலத்தின் போது இந்த விவசாய நிலங்களில் தேங்கும் தண்ணீர் சாலையோரம் உள்ள வடிகால் வாய்க்கால் மூலம் வெளியேறி வந்தது.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பொதுப்பணித்துறை அதிகாரிகளின் போதிய பராமரிப்பு இல்லாததாலும், தனிநபர் ஆக்கிரமிப்பு காரணமாகவும், சாலையோர வடிகால் வாய்க்கால் தற்போது முற்றிலும் மறைந்து விட்டது.
இதனால், சமீபத்திய புயல் மற்றும் கனமழை காரணமாக, அப்பகுதி வயல்களில் தேங்கிய மழை நீர் இதுவரையில் வடியவில்லை. இதனால், 100 ஏக்கர் பரப்பிலான நெல், காய்கறி பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி வருவதால், விவசாயிகள் வேதனை அடைந்துள் ளனர்.
எனவே, விவசாய நிலங்களில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக வெளியேற்ற பொதுப்பணி மற்றும் வருவாய்த்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

