/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புத்தாண்டில் கூடுதல் நேர மது விற்பனை: கலால்துறை கட்டணம் அறிவிப்பு
/
புத்தாண்டில் கூடுதல் நேர மது விற்பனை: கலால்துறை கட்டணம் அறிவிப்பு
புத்தாண்டில் கூடுதல் நேர மது விற்பனை: கலால்துறை கட்டணம் அறிவிப்பு
புத்தாண்டில் கூடுதல் நேர மது விற்பனை: கலால்துறை கட்டணம் அறிவிப்பு
ADDED : டிச 31, 2025 03:32 AM
புதுச்சேரி: புத்தாண்டில் கூடுதல் நேர மது விற்பனைக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என, கலால்துறை அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். புத்தாண்டையொட்டி, வழக்கமான நேரத்தை விட கூடுதலான நேரம் மது விற்பனை செய்ய கட்டணத்துடன் அனுமதி வழங்க கலால்துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி, எப்.எல். 1, 2 மது பார் அல்லாத சில்லறை விற்பனை நிலையங்கள் இன்று இரவு 11 முதல் 11:30 மணி வரை மது விற்பனை செய்ய 10 ஆயிரம் ரூபாய். பாருடன் கூடிய எப்.எல்.2 சில்லறை விற்பனை நிலையம் இரவு 11:00 முதல் நள்ளிரவு ஒரு மணி வரை மது விற்பனை செய்ய 20 ஆயிரம் ரூாபாய்.
எப்.எல். 2 சுற்றுலா மது விற்பனை பிரிவுக்கு நள்ளிரவு 12:00 முதல் 1:00 மணி வரை மது விற்பனை செய்ய 10 ஆயிரம் ரூபாய். இதர சிறப்பு நிகழ்ச்சிகளில் இரவு 11:00 மணி முதல் நள்ளிரவு 1:00 மணி வரை மது விற்பனை செய்ய 30 ஆயிரம் ரூபாய் என, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கலால்துறையில் இதற்காக விண்ணப்பித்து கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல் மது விற்பனை செய்யக்கூடாது என, கலால்துறை அறிவுறுத்தியுள்ளது.

