/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
என்.எல்.சி., நில எடுப்பு அலுவலகம் முற்றுகை: நெய்வேலியில் பரபரப்பு
/
என்.எல்.சி., நில எடுப்பு அலுவலகம் முற்றுகை: நெய்வேலியில் பரபரப்பு
என்.எல்.சி., நில எடுப்பு அலுவலகம் முற்றுகை: நெய்வேலியில் பரபரப்பு
என்.எல்.சி., நில எடுப்பு அலுவலகம் முற்றுகை: நெய்வேலியில் பரபரப்பு
ADDED : பிப் 20, 2024 05:41 AM

மந்தாரக்குப்பம் : என்.எல்.சி., சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம், வீடு கொடுத்த விவசாயிகள், உரிய இழப்பீடு வழங்க கோரி நெய்வேலி நில எடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
நெய்வேலி என்.எல்.சி., சுரங்க விரிவாக்க பணிக்காக கத்தாழை, கரிவெட்டி, ஊ ஆதனுார், மும்முடி சோழகன், கோபாலபுரம், அகரம் உள்ளிட்ட கிராமங்களில், கடந்த 2000ம் ஆண்டு முதல் 2007 வரையில், நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், என்.எல்.சி., க்கு நிலம், வீடு கொடுத்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், சுமார் 200 பேர் நேற்று காலை 11:30 மணிக்கு நெய்வேலியில் உள்ள மாவட்ட நில எடுப்பு அலுவகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கையகப்படுத்திய நிலங்கள் மற்றும் வீடுகளுக்கு உரிய இழப்பீட்டு கருணை தொகை, வேலை வாய்ப்பு வழங்க வலியுறுத்தி 3 மணி நேரம் போராட்டம் நடத்தினர்.
டி.எஸ்.பி., சபியுல்லா பேச்சுவார்த்தை நடத்தி, கலெக்டர் மற்றும் என்.எல்.,சி., சேர்மனிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதனையேற்று பகல் 1:30 மணியவில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.