/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அசிஸ்டண்ட் பணியிடங்களுக்கு புதிய சலுகைகள்; பிராந்திய மொழிகளிலும் போட்டி தேர்வு எழுதலாம்
/
அசிஸ்டண்ட் பணியிடங்களுக்கு புதிய சலுகைகள்; பிராந்திய மொழிகளிலும் போட்டி தேர்வு எழுதலாம்
அசிஸ்டண்ட் பணியிடங்களுக்கு புதிய சலுகைகள்; பிராந்திய மொழிகளிலும் போட்டி தேர்வு எழுதலாம்
அசிஸ்டண்ட் பணியிடங்களுக்கு புதிய சலுகைகள்; பிராந்திய மொழிகளிலும் போட்டி தேர்வு எழுதலாம்
ADDED : செப் 24, 2024 06:24 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் அரசின் 256 அசிஸ்டண்ட் பணியிடங்களுக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் வரும் 30ம் தேதி வரை விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அமைச்சக பதவிகளில் அசிஸ்டண்ட் எனப்படும் 1135 உதவியாளர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் 20 சதவீதம் நேரடி நியமனமாகவும், 20 சதவீதம் துறை ரீதியாக லிமிடெடு தேர்வு நடத்தியும், 60 சதவீதம் பதவி உயர்வு கொடுத்தும் நியமிக்கப்பட வேண்டும்.
ஆனால், கடந்த 12 ஆண்டுகளாக உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமன முறையில் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில் முதல்வர் ரங்கசாமி உத்தரவின்பேரில் கடந்த மாதம் 23ம் தேதி 256 அசிஸ்டண்ட் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் தொடர்பாக அறிவிப்பு வெளியானது. கடந்த 20 ம் தேதி வரை விண்ணப்பம் பெறப்பட்டது.
இதற்கிடையில், 256 அசிஸ்டண்ட் பணியிடங்களுக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், வரும் 30ம் தேதி வரை விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அசிஸ்டண்ட் பணியிடங்களுக்கு தற்போது பணியில் உள்ள யு.டி.சி., எல்.டி.சி., ஜூனியர் கிளர்க், டைபிஸ்ட் விண்ணப்பித்து வருகின்றனர்.
இவர்களில் ஓ.பி.சி., எம்.பி.சி., மீனவர், முஸ்லீம், பி.டி., பிரிவினர் முன்பு 35 வயது வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்போது 38 வயது வரை விண்ணப்பிக்க வயது சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், அசிஸ்டண்ட் அரசு பணியிட போட்டி தேர்வு முன் ஆங்கிலத்தில் மட்டுமே நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது, இப்போது ஆங்கிலம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் எழுதலாம் என புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
256 அசிஸ்டண்ட் பணியிடங்கள், பொது104, எம்.பி.சி 46, எஸ்.சி 41, ஓ.பி.சி 28, இ.டபுள்யூ.எஸ் 25, மீனவர் 5, முஸ்லீம்5, பி.டி., 1, எஸ்.டி.,1 என்ற இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. மாற்று திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடாக 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

