/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலி மருந்து விவகாரத்தில் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை :நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

ADDED : டிச 31, 2025 03:26 AM

புதுச்சேரி: போலி மருந்து விவகாரத்தில் தொடர்புடைய அரசியல் வாதிகளை வழக்கில் சேர்க்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என நேரு எம்.எல்.ஏ., கூறினார்.
இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது;
நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் போலி மருந்து முறைகேடு புதுச்சேரியில் நடந்துள்ளது. இந்த மோசடியில் அரசியல் பிரமுகர்கள் சம்பந்தப்பட்டிருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
போலி மருந்து தயாரித்த ராஜா மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை செய்து, பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். இதில் முக்கிய அரசியல் வாதிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிகிறது.
ஏற்கனவே காலாவதி மருந்து விவகாரத்தில் அதிகாரிகளை கைது செய்துவிட்டு, தொடர்புடைய அரசியல் வாதிகளை விட்டுவிட்டனர். அதுபோல் ஆகிவிடாமல் அதிகாரத்தில் உள்ள முக்கிய அரசியல்வாதிகளை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும். இல்லை என்றால் பொதுநல அமைப்புகளை திரட்டி தொடர் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வழக்கு சி.பி. ஐ.,க்கு ஒப்படைக்கும் முன் சி.பி.சி.ஐ.டி., மற்றும் சிறப்பு புலனாய்வு குழுவினர் நடத்திய விசாரணை அறிக்கையை வெளியிட வேண்டும்.
மேலும், சி.பி.ஐ., விசாரணை முறையாக நடக்க, இவ்வழக்கில் தொடர்பில் உள்ளவர்களை பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
அல்லது, அவர்களை கவர்னர் மற்றும் முதல்வர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றார்.