/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இளங்கோ அடிகள் பள்ளியில் நீட் தேர்வு பதிவு நிகழ்ச்சி
/
இளங்கோ அடிகள் பள்ளியில் நீட் தேர்வு பதிவு நிகழ்ச்சி
இளங்கோ அடிகள் பள்ளியில் நீட் தேர்வு பதிவு நிகழ்ச்சி
இளங்கோ அடிகள் பள்ளியில் நீட் தேர்வு பதிவு நிகழ்ச்சி
ADDED : பிப் 28, 2024 07:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : முத்திரைப்பாளையம் இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நீட் ஆன்லைன் பதிவு சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி துணை முதல்வர் கோகிலாம்பாள் தலைமை தாங்கி, புதுச்சேரி அரசு, அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கியுள்ள 10 சதவீத இடஒதுக்கீடு குறித்தும், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறும் வழிகள் குறித்தும் விளக்கினார்.
இயற்பியல் துறை விரிவுரையாளர் ஸ்ரீராம், நீட் தேர்வுக்கு பதிவு செய்வது எப்படி, முன் மாதிரி தேர்வுகள், முந்தைய ஆண்டு கட்ஆப் மதிப்பெண்கள் குறித்து விளக்கினார்.
ஆசிரியர்கள் மங்கை, புவனேஸ்வரி, நுண்கலை ஆசிரியர் இளமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.