ADDED : டிச 24, 2025 05:38 AM

புதுச்சேரி: தவளக்குப்பம் அக்ரி கணேஷ் பவுண்டேஷன் மற்றும் புதுச்சேரி வேளாண் அறிவியல் கல்லுாரி சார்பில், தேசிய விவசாயிகள் தினம் தவளக்குப்பத்தில் கொண்டாடப்பட்டது.
அக்ரி கணேஷ் பவுண்டேஷன் மற்றும் புதுச்சேரி வேளாண் அறிவியல் கல்லுாரியின் நிறுவனர் அக்ரி கணேஷ் தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர் மணிகண்டன் வரவேற்றார். தவளக்குப்பம் வேளாண் அலுவலர் தண்டபாணி முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியை நதியா தொகுத்து வழங்கினார். சி.இ.ஏ.டி., நிறுவனத்தின் முதன்மை ஆலோசகர் பாலாஜி நோக்கவுரையாற்றினார்.
நிகழ்ச்சியில் ஆண்டியார்பாளையம், தவளகுப்பம், சிவனார்புரம் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். தொடர்ந்து கல்லுாரியில் உள்ள பண்ணையில் மரக்கன்றுகள் நடப்பட்டது. ஏற்பாடுகளை கல்லுாரி ஆசிரியர்கள், மாண வர்கள் செய்திருந்தனர்.
கல்லுாரி முதல்வர் தமிழரசன் நன்றி கூறினார்.

