/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எம்.பி.பி.எஸ்., தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை
/
எம்.பி.பி.எஸ்., தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை
ADDED : பிப் 09, 2025 06:16 AM
புதுச்சேரி: எம்.பி.பி.எஸ்., இறுதி யாண்டு தேர்வை, மத்திய பல்கலைக்கழகம் தள்ளி வைக்க, புதுச்சேரி மாநில மாணவர்கள் மற்றும் பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கத் தலைவர் பாலசுப்ரமணியன், கவர்னருக்கு அனுப்பியுள்ள மனு:
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம், இளநிலை எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு எழுத்து தேர்வை, வரும் 20ம் தேதி துவக்கி, 1ம் தேதி வரை நடைபெறும் எனவும், செய்முறை தேர்வு மார்ச் 6ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடக்கும் என அறிவித்துள்ளது.
தற்போது, தனியார் கல்லுாரிகளில் இறுதியாண்டு மாதிரி தேர்வு நடந்து வருகிறது.
இத்தேர்வு வரும் 10ம் தேதி நடைபெறும் என்பதால், பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்விற்கு மாணவர்கள் தயாராக முடியாத சூழல் ஏற்படும்.
எனவே, மாணவர்கள் நலன் கருதி மத்திய பல்கலைக்கழகம் வரும் 20ம் தேதி துவங்கும் இறுதியாண்டு எழுத்து தேர்வை, 15 நாட்கள் காலதாமதமாக மார்ச் முதல் வாரத்தில் துவங்க ஆவண செய்ய வேண்டும்.

