sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 மூலநாதர் கோவில் மண்டப துாண் இடிந்து விழுந்ததால் பரபரப்பு; தொல்லியல் துறை மெத்தனம்: பக்தர்கள் அச்சம்

/

 மூலநாதர் கோவில் மண்டப துாண் இடிந்து விழுந்ததால் பரபரப்பு; தொல்லியல் துறை மெத்தனம்: பக்தர்கள் அச்சம்

 மூலநாதர் கோவில் மண்டப துாண் இடிந்து விழுந்ததால் பரபரப்பு; தொல்லியல் துறை மெத்தனம்: பக்தர்கள் அச்சம்

 மூலநாதர் கோவில் மண்டப துாண் இடிந்து விழுந்ததால் பரபரப்பு; தொல்லியல் துறை மெத்தனம்: பக்தர்கள் அச்சம்


ADDED : ஜன 04, 2026 04:42 AM

Google News

ADDED : ஜன 04, 2026 04:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூரில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத ஸ்ரீ மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் முறையான பராமரிப்பின்றி உள்ளது. இதனால், கோவிலின் மகா மண்டபம், அர்த்த மண்டபம், நடராஜர் மண்டபம் உள்ளிட்டவைகள் சேதமான நிலையில், கண்டு கொள்ளப்படாமல் இருந்து வருவதால், கோவிலின் உறுதி தன்மை கேள்விக்குறியாக உள் ளது.

இது தொடர்பாக, 'தினமலர்' நாளிதழில் தொடர்ந்து செய்திகள் வெளியிடப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, கடந்த 2024ம் ஆண்டு தொல்லியல் துறை சென்னை மண்டல கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையிலான அதிகாரிகள் கோவிலை ஆய்வு செய்தனர். நடராஜர் மண்டபத்தின் வெளிப்புறத்தில் உள்ள கடைகள் காலி செய்யப்பட்ட பின்னர், ஒவ்வொரு பகுதியாக புனரமைக்கும் பணிகள் துவங்கப்படும் என்றனர்.

வியாபாரிகள் கடைகளை காலி செய்ததை தொடர்ந்து, கடந்தாண்டு பிப்ரவரி 8ம் தேதி, நடராஜர் மண்டபத்தையொட்டி, வெளிப்புறத்தில் இருந்த கடைகள் இடித்து அகற்றப்பட்டது. அதன்பின்னர், சீரமைப்பு பணி துவங்காமல், தொல்லியல் துறை கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இ தனிடையே, நடராஜர் மண்டபத்தில் ஏற்கனவே விரிசல் ஏற்பட்டுள்ள சுவர் மற்றும் மேல்தளம் பகுதி ஜாக்கிகள் மூலமாக முட்டு கொடுத்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று அதிகாலை அங்கு நடந்த ஆருத்ரா தரிசன பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திட அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளே சென்றனர்.

அப்போது , நடராஜர் மண்டபத்தை தாங்கி நிற்கும் சுண்ணாம்பு மற் றும் செங்கல்லால் ஆன துாணின் மேற்பகுதி உடைந்து கீழே விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அச்சமயம், அங்கு யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அதிஷ்டவசமாக, மண்டபத்தின் உள்ளே வைத்துள்ள பழமை வாய்ந்த சிலைகள், சுவாமி வீதியு லா வாகனங்களும் தப்பின.

இந்திய அளவில் மிகவும் தொன்மை வாய்ந்த பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலை, தொல்லியல் துறை கண்டு கொள்ளாமல் இருப்பது, பக்தர்கள் மத் தியில் அதிர்ப்தியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, பாகூர் மூலநாதர் சுவாமி கோவில் புனரமைப்பு விஷயத்தில், கவர்னர் மற்றும் முதல்வர் நேரடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும்.






      Dinamalar
      Follow us