/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ. 46.12 லட்சத்தில் வளர்ச்சி பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
ரூ. 46.12 லட்சத்தில் வளர்ச்சி பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ரூ. 46.12 லட்சத்தில் வளர்ச்சி பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ரூ. 46.12 லட்சத்தில் வளர்ச்சி பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : டிச 27, 2025 05:32 AM

பாகூர்: பாகூர் தொகுதியில், 46.12 லட்ச ரூபாய் செலவிலான மேம்பாட்டு பணிகளை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலமாக, பாகூர் தொகுதி, வார்க்கால் ஓடை புதுநகரில், 43 லட்சத்து 64 ஆயிரம் 968 ரூபாய் செலவில், வடிகால், சுள்ளியாங்குப்பம் அங்கன்வாடி கட்டடத்தை 2 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் செலவில், புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான, பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பூமி பூஜை செய்து, பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சதாசிவம், உதவி பொறியாளர் பாலமுருகன், இளநிலை பொறியாளர் புனிதவதி உட்பட பலர் பங்கேற்றனர்.