ADDED : டிச 24, 2025 05:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு நிறுவனத்தில் மருத்துவர்களுக்கான தொடர் மருத்துவக் கருத்தரங்கு நடந்தது.
மருத்துவக் கண்காணிப்பாளர் ரமேஷ் கருத்தரங்கை தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக சென்னை கிளனீகல்ஸ் மருத்துவ மனையின் ஒட்டு றுப்பு அறுவை சிகிச்சை துறையின் தலைவர் செல்வ சீத்தாராமன் கலந்து கொண்டு ஒட்டுறுப்பு அறு வை சிகிச்சை, வாழ்வை மேம்படுத்தும் சிறப்பு சிகிச்சை என்ற தலை ப் பில் உரையாற்றினார் .
இதில் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஆத்மநாதன், மக்கள் தொடர்பு அதிகாரி ஹர்ஷவர்தன் சர்மா, குறை தீர்ப்பு அதிகாரி ரவி மற்றும் அனைத்து மருத்துவ வல்லுனர்கள், மருத்துவ அதிகாரிகள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.

