
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : வின்கியூர் நேச்சுரோபதி கிளினிக் மற்றும் ஹோப் பல் மருத்துவ மையம் இணைந்து, இலவச மருத்துவ முகாமை நடத்தியது.
மகாசிவராத்திரியையொட்டி, இலவச இயற்கை சித்த மருத்துவ மற்றும் பல் மருத்துவ முகாமை நடத்தியது. முகாம், லாஸ்பேட்டை, பல்நோக்கு சமூதாய கூடத்தில் நடந்தது.
நந்தா ஜெய ஸ்ரீதர், நந்தா ஜெய பூவராகவன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
டாக்டர் ராஜவிநாயகம் தலைமை தாங்கினார். பல் மருத்துவர் கோகுல்ராஜ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மருத்துவர்கள் ராஜராஜேஸ்வரி, திவ்ய பாரதி ஆகியோர் பங்கேற்றனர்.
முகாமில், பொதுமக்கள், சித்த மருத்துவம் மற்றும் பல் சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.

