தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/குமாரப்பாளையத்தில் மாசி மக தீர்த்தவாரி

குமாரப்பாளையத்தில் மாசி மக தீர்த்தவாரி

குமாரப்பாளையத்தில் மாசி மக தீர்த்தவாரி


ADDED : பிப் 23, 2024 10:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2024 10:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கனுார்: குமாரப்பாளையம் எல்லை காளியம்மன் கோவில் வளாகத்தில் நடந்த மாசி மகத் தீர்த்தவாரியில் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

திருக்கனுார் அடுத்த குமாரப்பாளையம் சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள எல்லை காளியம்மன் கோவில் வளாகத்தில் மாசி மகத் தீர்த்தவாரி நிகழ்ச்சி நேற்று நடந்தது.

தீர்த்தவாரியில் குமாரப்பாளையம் தண்டு மாரியம்மன், பிடாரிப்பட்டு, மணவெளி, டி. புதுக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுவாமிகள், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

இதில், குமாரப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us