/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போக்சோ வழக்கில் பணம் கொடுத்து குற்றத்தை மறைக்க உதவியவர் கைது
/
போக்சோ வழக்கில் பணம் கொடுத்து குற்றத்தை மறைக்க உதவியவர் கைது
போக்சோ வழக்கில் பணம் கொடுத்து குற்றத்தை மறைக்க உதவியவர் கைது
போக்சோ வழக்கில் பணம் கொடுத்து குற்றத்தை மறைக்க உதவியவர் கைது
ADDED : அக் 02, 2024 02:05 AM
பாகூர் : பாகூர் போக்சோ வழக்கில், பணம் கொடுத்து குற்றத்தை மறைக்க உடந்தையாக செயல்பட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த புகாரின் பேரில், பாகூரை சேர்ந்த ராதாக்கிருஷ்ணன் 65; என்பவரை, போக்சோ சட்டத்தின் படி பாகூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவத்தை மூடி மறைக்க ராதாக்கிருஷ்ணனிடம் இருந்து பணத்தை பெற்று சிறுமியின் பெற்றோரிடம் கொடுத்ததாக கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. போலீசார் விசாரணையில், குற்றத்தை மூடி மறைக்க பணம் கை மாறியது தெரியவந்துள்ளது.
இந்த விஷயத்தில் குற்றத்தை மறைக்க உதவியாக இருந்த ராதாக்கிருஷ்ணனின் மகன் கிருஷ்ணன், 29; என்பவரை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போக்சோ சட்டப்படி, பாதிக்கப்பட்ட நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்த அடையாளம், தகவல்கள், ஊடகத்திலோ, அல்லது பொது வெளியிலோ பகிர கூடாது.
ஆனால், வைரல் வீடியோவில், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்த விவரம், குற்றத்தை மறைக்க பணம் கை மாறிய விவகாரம் போன்ற தகவல்கள் வெளியாகி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வழக்கில், குற்றத்தை மூடி மறைக்கும் வகையில் உடந்தையாக செயல்பட்டவர்கள் குறித்தும், பாதிக்கப்பட்டவரின் விவரங்களை பொது வெளியில் பகிர்ந்தவர்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

