ADDED : ஆக 10, 2025 11:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால் : நாயை கல்லால் அடித்த வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால் திருப்பட்டினம் கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார்,50; தச்சு வேலை செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது வாசலில் உட்கார்ந்திருந்தார். அப்போது பைக்கில் சென்ற திட்டச்சேரி சாலையை சேர்ந்த சூர்யா,30; என்பவரை பார்த்து நாய் குறைத்தது. ஆத்திரமடைந்த சூர்யா, நாயை கல்லால் அடித்தார். அந்த கல், குமாரின் பைக் கண்ணாடியில் பட்டு உடைந்தது. இதை தட்டிக் கேட்ட குமாரை, சூர்யா ஆபாசமாக திட்டி தாக்கினார்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து, சூர்யாவை கைது செய்தனர்.

