/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் சாதுர்யம்
/
உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் சாதுர்யம்
ADDED : மார் 10, 2024 05:01 AM
புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட மரணத்திற்கு நீதி கேட்டும், போதை பொருள் விற்பனையை தடுக்காத மாநில அரசை கண்டித்தும் அ.தி.மு.க., இண்டியா கூட்டணி கட்சிகள் சார்பில் பந்த் போராட்டம் நடந்தது.
இண்டியா கூட்டணி கட்சியினர் ராஜா தியேட்டர் சிக்னலில் இருந்து நேரு வீதி, மிஷன் வீதி வழியாக வந்து தலைமை தபால் நிலையம் எதிரே முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர். சிலர் தடுப்புகளை தாண்டி கவர்னர் மாளிகை வாசல் வரை சென்று அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
போலீசார் துரத்தி பிடித்து கைது செய்தனர். இதனால் கவர்னர் மாளிகை முன்பு களேபரமாக இருந்தது. போலீஸ் சீனியர் அதிகாரிகளுக்கு தமிழ் தெரியாததால், முற்றுகை போராட்டம் நடத்துபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆசுவாசப்படுத்தவில்லை. இதனால் போராட்டக்காரர்கள் கவர்னர் மாளிகை வாசல் வரை சென்று கோஷம் எழுப்பினர்.
இதை அறிந்த போலீஸ் தலைமை, நேற்று நடந்த மாணவர் முற்றுகை போராட்டத்திற்கு உள்ள எஸ்.பி.க்கள்,இன்ஸ்பெக்டர்களை நியமித்தனர். உள்ளூர் அதிகாரிகள் போராட்டக்காரர்கள் புறப்படும்போதே, இந்த இடத்தை தாண்டி சென்றால் கைது செய்வோம் என, எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பு பிரதிநிதிகளிடம் சாதுார்யமாக பேசி போராட்டத்தின் வீரியத்தை குறைத்தனர்.
இதனால் செயின்ட் லுாயிஸ் வீதியிலே போராட்டத்தை முடித்து கொண்டு மாணவர்கள் புறப்பட்டனர்.

