நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : கவிஞர் தமிழ் ஒளி கல்வி வட்டத்தின் சார்பில், நுாறாவது அமர்வு நிகழ்ச்சி நடந்தது.
கருவடிக்குப்பத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் லெனின் துரை முன்னிலை வகித்தார்.
'நமது மூதாதையர்களின் முகவரி' என்ற தலைப்பில் தாகூர் கல்லுாரியின் முன்னாள் முதல்வர் இளங்கோ சிறப்புரையாற்றினார். நிகழ்வில் பேராசிரியர் சிவக்குமார், வெங்கட்டா நகர் நலவாழ்வு சங்கத் தலைவர் விஜயகுமார், கல்வி வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜானி உட்பட பல பங்கேற்றனர்.

