/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மகளிர் தொழில்நுட்ப கல்லுாரியில் வேலை வாய்ப்பு நேர்காணல்
/
மகளிர் தொழில்நுட்ப கல்லுாரியில் வேலை வாய்ப்பு நேர்காணல்
மகளிர் தொழில்நுட்ப கல்லுாரியில் வேலை வாய்ப்பு நேர்காணல்
மகளிர் தொழில்நுட்ப கல்லுாரியில் வேலை வாய்ப்பு நேர்காணல்
ADDED : டிச 22, 2025 04:50 AM
புதுச்சேரி: காரைக்கால், காரைக்கால் மேடு அரசு மகளிர் தொழில்நுட்ப கல்லுாரியில் இறுதியாண்டு மாணவிகளுக்கான வளாக நேர்காணல் நடந்தது.
கல்லுாரி முதல்வர் பாபு அசோக் தலைமை தாங்கினார். கல்லுாரி வேலை வாய்ப்பு அலுவலர் விமலன் வரவேற்றார். ஜப்பான் நாட்டை தலைமையிடமாக கொண்டு, சென்னையில் இயங்கும் நிசி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் நிறுவனம் நேர்காணல் நடத்தியது. நிறுவனத்தின் பொது மேலாளர் வெங்கடேஷ் நேர்காணலை துவக்கி வைத்தார்.
நேர்காணலில் கல்லுாரி இறுதியாண்டு எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், இன்ஸ்ட்ருமெண்ட்டேஷன் அண்ட் கன்ட்ரோல் இன்ஜினீயரிங், கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் மாணவர்கள் பங்கேற்றனர்.
இரண்டு சுற்றுகளாக நடைபெற்ற வளாக நேர்காணலில் காரைக்கால் மேடு அரசு மகளிர் தொழில்நுட்ப கல்லுாரி மாணவிகள் 23 பேர், அரசு காரைக்கால் தொழில்நுட்ப கல்லுாரி மாணவர்கள் 2 பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். ஏற்பாடுகளை கல்லுாரி பயிற்சி வேலைவாய்ப்பு பிரிவினர் செய்திருந்தனர்.

