/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வக்கீல் வீட்டில் நகை மாயம்; போலீசார் விசாரணை
/
வக்கீல் வீட்டில் நகை மாயம்; போலீசார் விசாரணை
ADDED : செப் 09, 2025 09:33 PM
புதுச்சேரி; வழக்கறிஞர் வீட்டில் இரண்டரை சவரன் நகை மாயமானது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சாரம், வெங்கடேஸ்வரா நகர், பொறையாத்தம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம், வழக்கறிஞர். இவரது மனைவி கோவிந்தம்மாள். கடந்த 1ம் தேதி தனது மகனுக்கு மதிய உணவு கொடுப்பதற்காக வெளியே செல்ல, பக்கத்து வீட்டை சேர்ந்த மேரி ரோஸ்லின் என்பரிடம் தனது மற்றொரு குழந்தையும், வீட்டையும் பார்த்துக் கொள்ளுமாறு கூறி சென்றார். பின், வீட்டிற்கு வந்த கோவிந்தம்மாள், வெளியே நின்றிருந்த மேரி ரோஸ்லினிடம் தனது குழந்தையை வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதற்கிடையே, கடந்த 4ம் தேதி உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக அலமாரியில் வைத்திருந்த தனது நகைப்பெட்டியை பார்த்தபோது, அதிலிருந்த இரண்டரை சவரன் செயின் காணவில்லை.
இதையடுத்து, கோவிந்தம்மாள் டி.நகர் போலீசில் வீட்டில் இருந்த நகை காணமால் போனதில், மேரி ரோஸ்லின் மீது சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.