/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தையல், ஆரி ஒர்க் பயிற்சி சான்றிதழ் வழங்கல்
/
தையல், ஆரி ஒர்க் பயிற்சி சான்றிதழ் வழங்கல்
ADDED : பிப் 21, 2024 08:43 AM

புதுச்சேரி : புதுச்சேரியில், இலவச தையல் மற்றும் ஆரி ஒர்க் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிழ் வழங்கப்பட்டது.
தருமாபுரியில் இயங்கி வரும் லோட்டஸ் பவுண்டேஷன் நிறுவனம் மற்றும் டெனிகோ ஆட்டோமேட்டிவ்தனியார்நிறுவனம் இணைந்து 'உயரும் பெண்கள் திட்டம்' மூலம் இலவச தையல் மற்றும் ஆரி ஒர்க் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அங்கு,பயிற்சி பெற்ற180 பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா, நடந்தது. அரசு கொறடா ஆறுமுகம் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். டெனிகோ ஆட்டோமேட்டிவ் தனியார் நிறுவனத்தின் நிர்வாக தலைவர் இக்நேஷியஸ் சார்லஸ்,வனிதா, லோட்டஸ் பவுண்டேஷன் நிறுவன இயக்குனர் சமயவேலு, தீபா, காயத்ரி, ஸ்ரீ மீரா சதாசிவம், அஸ்வினி, திவ்யா, ரேவதி,சுந்தரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

