/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இ.சி.ஆரில் வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றம் நீர்பாசன கோட்ட அதிகாரிகள் அதிரடி
/
இ.சி.ஆரில் வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றம் நீர்பாசன கோட்ட அதிகாரிகள் அதிரடி
இ.சி.ஆரில் வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றம் நீர்பாசன கோட்ட அதிகாரிகள் அதிரடி
இ.சி.ஆரில் வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றம் நீர்பாசன கோட்ட அதிகாரிகள் அதிரடி
ADDED : செப் 11, 2025 03:05 AM

புதுச்சேரி: இ.சி.ஆரில் வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
லாஸ்பேட்டை மற்றும் அதனை சுற்றிலுள்ள பகுதிகளில் பெருக்கெடுக்கும் வெள்ளம் இ.சி.ஆரை கடந்து, கிருஷ்ணா நகர் வாய்க்கால் வழியாக கருவடிக்குப்பம் வெள்ளவாரி ஓடையில் விழுந்து கடலில் கலக்கும்.
ஆக்கிரமிப்பு காரணமாக பல இடங்களில் கிருஷ்ணா நகர் வாய்க்கால் சுருங்கிபோய் இருந்தது. மடுவுபேட் புதிய லாஸ்பேட்டை குடியிருப்பு அருகே 70 மீட்டர் நீளத்திற்கு 6 வீடுகள் கட்டப்பட்டு, கடந்த 15 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது.
ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள பொதுப்பணித் துறை நீர்பாசன கோட்டம் நோட்டீஸ் கொடுத்ததோடு, அவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வேறு இடங்களில் வீடுகள் ஒதுக்கவும் டோக்கன் கொடுக்கப்பட்டது. அதையடுத்து அவர்கள் வீடுகளை காலி செய்ய ஒப்புக்கொண்டு வீட்டில் இருந்த பொருட்களை அகற்றினர்.
இந்த ஆக்கிரமிப்பு குடிசைகளை பொதுப்பணித் துறை நீர்பாசன உதவி பொறியாளர் லுாயி பிரகாசம், இளநிலை பொறியாளர் கணேஷ் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அதிரடியாக அகற்றினர்.
நீர்பாசன கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:
கிருஷ்ணா நகர் வாய்க்காலின் ஒரு பகுதியான மவுடுபேட் வாய்க்கால் 70 மீட்டர் நீளத்திற்கு கடந்த 15 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு 6 வீடுகள் கட்டப்பட்டு இருந்தது. அவர்களுக்கு மாற்று வசதி செய்து கொடுக்கப்பட்டு, ஆக்கிரமிப்பு வாய்க்கால் மீட்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு இடத்தில் கவிக்குயில் நகருக்கு செல்லும் வாய்க்காலும் இருக்கிறது. இந்த இடத்தில் ெஷட்டர் அமைக்க உள்ளோம். இதன் மூலம் வெள்ள நீர் அதிகமாகும்போது ெஷட்டர் மூடப்பட்டு, கிருஷ்ணா நகர் வாய்க்காலில் திருப்பிவிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கவிக்குயில் நகர் வெள்ளத்தில் தத்தளிப்பது தடுக்கப்படும்' என்றனர்.