/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தனியார் நிறுவன ஊழியருக்கு மிரட்டல்
/
தனியார் நிறுவன ஊழியருக்கு மிரட்டல்
ADDED : மார் 12, 2024 05:49 AM
நெட்டப்பாக்கம் : தோசை மாவு பாக்கெட் குறித்து கேட்ட தனியார் நிறுவன ஊழியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
நெட்டப்பாக்கம் நெசவாளர் குடியிருப்பு 2 வது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் 39, தனியார் நிறுவன ஊழியர்.இவர் நேற்று முன்தினம் இரவு 9.00 மணிக்கு மடுகரை முருகன் கோவில் தெருவில் கடை வைத்துள்ள ரமேஷ் என்பவரிடம் தோசை மாவு பாக்கெட் வாங்கிச்சென்றார்.
மாவு பாக்கெட்டை பிரித்து தோசை சுடும் போது மாவு கெட்டுப்போய் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து நேற்று சுரேஷ் ஏன் கெட்டுப்போன மாவு பாக்கெட் கொடுத்தீர்கள் என ரமேஷிடம் கேட்டார். இதனால் கோபமடைந்த ரமேஷ், சுரேஷ்யை அசிங்கமாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து சுரேஷ் புகாரின் பேரில் மடுகரை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

