/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தி.மு.க., தலைமையில் ஆட்சி மாநில துணை அமைப்பாளர் பேட்டி
/
தி.மு.க., தலைமையில் ஆட்சி மாநில துணை அமைப்பாளர் பேட்டி
தி.மு.க., தலைமையில் ஆட்சி மாநில துணை அமைப்பாளர் பேட்டி
தி.மு.க., தலைமையில் ஆட்சி மாநில துணை அமைப்பாளர் பேட்டி
ADDED : செப் 21, 2025 03:58 AM
புதுச்சேரியில் தி.மு.க., த லைமையில் தான் ஆட்சி அமையும் என அக்கட்சியின் மாநில துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., காங்., தலைமையிலான இண்டி., கூட்டணி ஆட்சியை பிடிக்கும்.
அதில், எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. கூட்டணியில் யாரும் எந்த குழப்பத்தையும் ஏற்படுத்த முடியாது. தலைவர் ஸ்டாலின் சொல்வதை நாங்கள் செய்கிறோம்.
தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், காங்., ராகுலும் சகோதரர்களாக உள்ளனர். கண்டிப்பாக இண்டி., கூட்டணி ஆட்சியை பிடிக்கும்.
புதுச்சேரியில் மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் ஆட்சி அமையும். அதற்கு ஸ்டாலின் மற்றும் ராகுல் இரு வரும் அனுமதி வழங்குவர். கூட்டணி கட்சிகளும் இதற்கு ஆதரவு கொடுப்பர்.
முதல்வராக சிவா தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எத்தனை தொகுதிகளில் போட்டி என்பதை தலைவர் முடிவு செய்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.