/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சர்வதேச ஹோமியோபதி தின விழிப்புணர்வு  நிகழ்ச்சி

 சர்வதேச ஹோமியோபதி தின விழிப்புணர்வு  நிகழ்ச்சி

 சர்வதேச ஹோமியோபதி தின விழிப்புணர்வு  நிகழ்ச்சி

 சர்வதேச ஹோமியோபதி தின விழிப்புணர்வு  நிகழ்ச்சி

 சர்வதேச ஹோமியோபதி தின விழிப்புணர்வு  நிகழ்ச்சி

ADDED : ஏப் 13, 2026 04:14 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: திருக்கனுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சர்வதேச ஹோமியோபதி தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு ஹோமியோபதி மருத்துவ அதிகாரி ஸ்ரீதேவி தலைமை தாங்கினார். சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி சுஷ்மிதா முன்னிலை வகித்தார்.

இதில், ஹோமியோபதி மருத்துவ விழிப்புணர்வு கையேடு மற்றும் மருத்துவத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், பொதுமக்கள், செவிலிய அதிகாரிகள், கிராமப்புற செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, மருத்துவ அதிகாரி மற்றும் செவிலியர்கள் சார்பில் ஹோமியோபதி மருத்துவ மேதை சாமுவேல் ஹானிமன் படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தப்பட்டது.