/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம்
/
டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம்
ADDED : செப் 30, 2024 05:42 AM

புதுச்சேரி: சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியில், தீவிர டெங்கு கொசுவை அழிக்கும் களப்பணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரியில் மழை நீர் தேங்கும் பகுதிகளில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. அதனை கட்டுப் படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, சாமிபிள்ளை தோட்டத் தில், உழவர்கரை நகராட்சி மற்றும் லாஸ்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து, தீவிர டெங்கு கொசு உற்பத்தியை கண்டறிந்து அழிக்கும் களப்பணி நடந்தது.
உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ், தேசிய பூச்சிகளால் பரவும் நோய் தடுப்புத் திட்ட உதவி இயக்குனர் வசந்தகுமாரி, லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி நளினி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
வீடு வீடாக சென்று, டெங்கு கொசு உற்பத்தியாகும் தேவையற்ற பொருட்களை கண்டறிந்து அப்புறப்படுத்த செய்தனர்.
தொடர்ந்து டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர். மேலும், 4 நாட்களுக்கு மேல் காய்ச்சல், கண் பின்புறம் வலி இருந்தால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனையை அணுக அறிவுறுத்தினர்.
புகை மருந்து மற்றும் கொசு மருந்து தெளிக்கும் பணி நடந்தது.

