/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பட்டாசு கடைகளில் சப்- கலெக்டர் ஆய்வு
/
பட்டாசு கடைகளில் சப்- கலெக்டர் ஆய்வு
ADDED : அக் 29, 2024 06:25 AM
பாகூர்: பாகூர் பகுதியில் உள்ள பட்டாசு கடைகளில், சப் கலெக்டர் தலைமையில், வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி, புதுச்சேரியில் பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. கடைகள் திறக்கப்பட்டு பட்டாசு விற்பனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தெற்கு மாவட்ட சப் கலெக்டர் சோம சேகர் அப்பாராவ் கொட்டாரு, நேற்று பாகூர் பகுதியில் உள்ள பட்டாசு கடைகளில் திடீர் செய்தார். அப்போது, பட்டாசு விற்பனைக்காக உரிமம் உள்ளதா, தீ தடுப்புக் கருவிகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளதா, விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என ஆய்வு செய்தார். ஆய்வின் போது, பாகூர் தாசில்தார் கோபாலக்கிருஷ்ணன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

