மின் கட்டண உயர்வை கண்டித்து இண்டியா கூட்டணி பந்த்
மின் கட்டண உயர்வை கண்டித்து இண்டியா கூட்டணி பந்த்
மின் கட்டண உயர்வை கண்டித்து இண்டியா கூட்டணி பந்த்
மின் கட்டண உயர்வை கண்டித்து இண்டியா கூட்டணி பந்த்

மார்க்கெட்கள்
பெரிய மார்க்கெட் குபேர் மார்க்கெட், மீன் அங்காடி, நெல்லித்தோப்பு, முத்தியால்பேட்டை மார்க்கெட், செஞ்சி சாலை மார்க்கெட் அனைத்துமே மூடப்பட்டிருந்தது. சாலையோரம் இருக்கும் அனைத்து மீன் மார்க்கெட்டுகளும் மூடப்பட்டு இருந்தது.
பஸ்கள்
பந்த் போராட்டம் காரணமாக உள்ளூர், வெளியூர் பயணிகளால் நிரம்பி வழியும் ஏ.எப்.டி., தற்காலிக பஸ்ஸ்டாண்ட் வெறிச்சோடி காணப்பட்டது.
பஸ் கண்ணாடி உடைப்பு
பி.ஆர்.டி.சி., , தமிழக அரசு பஸ்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. இருப்பினும் நெல்லித்தோப்பில் பி.ஆர்.டி.சி., பஸ் ஒன்றும், முதலியார்பேட்டையில் கடலுார் நோக்கி சென்ற தமிழக அரசு பஸ் கண்ணாடி ஒன்றும் உடைக்கப்பட்டது.
இதர வாகனங்கள்
ஒரு சில டெம்போ ஆட்டோக்கள் மட்டுமே இயங்கின. ்அவையும் மதியத்திற்கு மேல் இயங்கவில்லை.
பள்ளிகளுக்கு விடுமுறை
மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்படும் என்பதால், அரசே ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை விடுமுறை அறிவித்தது.
தியேட்டர்கள்
தியேட்டர்களில் பகல் காட்சிகள் அனைத்துமே ரத்து செய்யப்பட்டன. புதுச்சேரியில் உள்ள மத்திய,மாநில அரசு அலுவலங்கள் வழக்கம்போல் இயங்கின. அரசு ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர்.
தொழிற்சாலைகள்
பந்த் போராட்டம் காரணமாக சேதராப்பட்டு, மேட்டுப்பாளையம், தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டைகளில் தொழிற்சாலைகளும் மூடப்பட்டன.
பெட்ரோல் பங்க்குகள் மூடல்
பந்த் போராட்டம் காரணமாக அனைத்து பெட்ரோல் பங்க்குகளும் மூடப்பட்டு கிடந்ததால், பெட்ரோல் கிடைக்காமல் கடும் அவதிக்கு ஆளாகினர்.
இயல்வு வாழ்க்கை பாதிப்பு
ஒட்டுமொத்தமாக பந்த் போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நகர பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நகர் முழுக்க 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


