/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில் சாஸ்திரிகள் சிலை திறப்பு
/
மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில் சாஸ்திரிகள் சிலை திறப்பு
மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில் சாஸ்திரிகள் சிலை திறப்பு
மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில் சாஸ்திரிகள் சிலை திறப்பு
ADDED : செப் 30, 2024 05:48 AM

புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் உருவச்சிலை திறக்கப்பட்டது.
புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில், கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளின், 30,ம் ஆண்டு ஆராதனை விழா நேற்று நடந்தது.
இந்த விழாவில் வச்சலா சிதம்பரம் குருக்கள் தலைமை தாங்கினார். இதில், கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் உருவச்சிலையை, கீதாசங்கர குருக்கள் திறந்து வைத்தார். கீதாராம சாஸ்திரிகள் தலைமையில், மிருத்யுஞ்ஜய மற்றம் ஆயுஷ்ய ேஹாமங்கள் நடந்தன. இதில், பிரத்திங்கராகாளி கோவில் நிறுவனர் ஜனார்த்தன சுவாமிகள் பங்கேற்றார்.
இதைத்தொடர்ந்து, கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி உருவ சிலைக்கு மலர் அஞ்சலி வழிபாடு நடந்தது. மேலும் சாம வேத பாராயணம், குரு ஆராதனை உள்ளிட்ட வழிபாடுகள் நடந்தன. இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.