/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.85 லட்சத்தில் திட்ட பணிகள் காரைக்காலில் துவக்கி வைப்பு
/
ரூ.85 லட்சத்தில் திட்ட பணிகள் காரைக்காலில் துவக்கி வைப்பு
ரூ.85 லட்சத்தில் திட்ட பணிகள் காரைக்காலில் துவக்கி வைப்பு
ரூ.85 லட்சத்தில் திட்ட பணிகள் காரைக்காலில் துவக்கி வைப்பு
ADDED : பிப் 28, 2024 07:16 AM

புதுச்சேரி : காரைக்காலில், ரூ. 85 லட்சம் மதிப்பில் புதிய வணிக வளாகம், சாலை உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளை, வைத்திலிங்கம் எம்.பி., துவக்கி வைத்தார்.
காரைக்கால், கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியில் ரூ. 20.90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய வணிக வளாக திறப்பு விழா நேற்று நடந்தது. வைத்திலிங்கம் எம்.பி., திறந்து வைத்தார்.
மேலும், நேரு நகரில் ரூ.10.65 லட்சம் மதிப்பில் சாலை பணிகள், தந்தை பெரியார் நகரில் ரூ. 10. 63 லட்சத்தில் வடிகால், காரைக்கால் கோவில் பத்து, பட்டேல் நகரில் ரூ. 8.75 லட்சத்தில் தார்சாலை பணிகள் மற்றும் பி.கே. சாலை கோல்டன் நகரில் ரூ. 13.60 லட்சத்தில் சாலை பணிகள் துவக்கி வைக்கப்பட்டது.
மேலும் நிரவி உசேனியா அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதலாக ஒரு வகுப்பறை கட்டம் ரூ. 19 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
காரைக்காலில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, மொத்தம் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில், வைத்திலிங்கம் எம்.பி., துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சிகளில் தியாகராஜன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் சுப்ரமணியன், சப் கலெக்டர் ஜான்சன், நகராட்சி ஆணையர் சத்யா, காரைக்கால் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விஜய மோகனா, நகராட்சி உதவி பொறியாளர் லோகநாதன் மற்றும் இளநிலை பொறியாளர்கள் அரசு அதிகாரிகள், காங்., நிர்வாகிகள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

