/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின்னொளியில் ஜொலித்த சட்டசபை வளாகம்
/
மின்னொளியில் ஜொலித்த சட்டசபை வளாகம்
ADDED : நவ 02, 2024 07:22 AM

புதுச்சேரி,: விடுதலை நாள் விழாவையொட்டி, வண்ண விளக்குகளால் அலங்காரிக்கப்பட்டு, மின்னொளியில் ஜொலித்த சட்டசபை மற்றும் அரசு கட்டடங்களை பொதுமக்கள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
புதுச்சேரி விடுதலை நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, புதுச்சேரி கவர்னர் மாளிகை (ராஜ் நிவாஸ்), சட்டசபை வளாகம், கடற்கரை சாலையில் உள்ள தலைமை செயலகம், நகராட்சி அலுவலகம், காந்தி சிலை உள்ளிட்ட புதுச்சேரியில் உள்ள தலைவர்கள் சிலை மற்றும் முக்கிய அரசு கட்டடங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டுள்ளது.
இதில், கட்டடங்கள் முழுதும் வண்ண விளக்குகள் மற்றும் எல்.இ.டி., பல்புகள் மூலம் அலங்கரிக்கப்பட்டு, இரவில் வண்ண மயமாக மின்னொளியில் ஜொலித்து வருகிறது. இவற்றை பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு, செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

