/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நரிக்குறவர்களுக்கு அடையாள அட்டை
/
நரிக்குறவர்களுக்கு அடையாள அட்டை
ADDED : ஏப் 19, 2025 06:48 AM

புதுச்சேரி; தேசிய அளவிலான கைவினை கண்காட்சியில் பங்கேற்கும் நரிக்குறவ மக்களுக்கு அடையாள அட்டையை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முன்னாள் திட்ட இயக்குனர் சத்தியமூர்த்தி வழங்கினார்.
நரிகுறவ சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேசிய அளவில் நடக்கும் கைவினை கண்காட்சியில் பங்கேற்க இந்திய கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறி ஏற்றுமதிக் கழகத்தின் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மதகடிப்பட்டு நரிக்குறவர்கள் குடியிருப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாற்றுத்திறனாளிகள் அமைப்புகளின் பேரவை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முன்னாள் திட்ட இயக்குனர் சத்தியமூர்த்தி கலந்து கொண்டு 30க்கும் மேற்பட்ட நரிக்குறவ சமுதாய மக்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.
நரிக்குறவர்கள் சமுதாய மக்களின் தலைவர் தேசிங்கு வரவேற்றார். அப்போது, நரிகுறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதில், வாஞ்சிலிங்கம், முருகன், பாலகுமார், விவேக், காசிநாதன், திருநாவுக்கரசு, மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

